பால்சுவா குதிரைலாட வடிவ ஏரி
இந்திய ஏரிபால்சுவா குதிரைலாட வடிவ ஏரி அல்லது பால்சுவா ஜீல் எனவும் அறியப்படும் இது, இந்தியாவின் தில்லியின் வடமேற்கு தில்லி மாவட்டதிலுள்ள ஒரு ஏரியாகும். இது முதலில் குதிரைலாட வடிவில் இருந்தது. இருப்பினும், பல ஆண்டுகளாக அதன் பாதி நிலப்பரப்பு சிறுது சிறுதாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறாது. இது முகுந்த்பூரின் அருகிலுள்ள பால்சுவா யகாங்கிர் பூரின் விரிவாக்கமான குறைந்த வருமானம் கொண்டோருக்கான வீட்டுக் குடியிருப்புப் பகுதியாகும். இந்த ஏரி ஒரு காலத்தில் சிறந்த ஈரநில சுற்றுச்சூழல் இடமாகவும் வனவிலங்கு வாழ்விடமாகவும் இருந்தது. மேலும், உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த வனவிலங்குகளுக்கு உணவளித்து வந்தது. குறிப்பாக நீர்ப்பறவைகள், நாரைகள் மற்றும் கொக்குகள் உட்பட. அருகில் உள்ள யமுனை ஆறு பல ஆண்டுகளாக அதன் போக்கை மாற்றியபோது அதன் நெளியாறு சுழல்களில் ஒன்றை இங்கே விட்டுச் சென்றது. நவீன டெல்லியை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க இந்த குதிரைலாட வடிவ ஏரி முதலில் உருவாக்கப்பட்டது.

